×

பாஜ ரத யாத்திரை விரைவில் தொடக்கம்: சபரிமலையில் தரிசனம் செய்ய அமித்ஷா திட்டம்...கேரளாவில் மீண்டும் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக பெரும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், பாஜ தலைவர் அமித்ஷா சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுதொடர்பாக இதுவரை 3300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தற்போதும் கேரளா முழுவதும் ேபாராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் நவ.8ம் தேதி முதல் 13ம் தேதிவரை கேரளாவில் ரதயாத்திரை நடத்த பாஜ தீர்மானித்துள்ளது. காசர்கோட்டில் 8ம்தேதி தொடங்கும் இந்த ரத யாத்திரை 13ம் தேதி சபரிமலையில் நிறைவடைகிறது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்த பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, சபரிமலை கோயில் ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்தும் பக்தர்களை ஒடுக்க நினைத்தால் கேரள அரசுக்கு  சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து சபரிமலை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த பாஜ தீர்மானித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு பாஜ தலைவர் அமித்ஷா பச்சைக்கொடி காண்பித்துள்ளார். முதலில் உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த பாஜ, பின்னர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க அமித்ஷா சபரிமலைக்கு வர திட்ட மிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் மண்டல காலத்தின் போது அவர் சபரிமலைக்கு தரிசனத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தேதி குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பாஜவின் சபரிமலை வரை செல்லும் ரத யாத்திரை நிறைவு  விழாவில் அமித்ஷாவை பங்கேற்க செய்ய பாஜவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் மண்டலகால தரிசனத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரளாவில் தற்போது மீண்டும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமல்படுத்தியே தீருவோம்:
தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் செம்பழந்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: சபரிமலை விவகாரத்தில் உண்மை கூறுபவர்களை சங் பரிவார் அமைப்பினர் மிரட்டி வருகின்றனர்.  இதன்ஒரு பகுதியாகத்தான் சந்தீபானந்த கிரி ஆஸ்ரமத்தில் தாக்குதல் நடந்துள்ளது. எனக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை கண்டு நான் பயப்படமாட்டேன். மதவாதிகளின் கைகளால் இறக்க  நேரிட்டாலும் சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம். சபரிமலையில் இளம் பெண்களை கொண்டு சென்றே தீவிர வேண்டும் என்ற பிடிவாதம் கேரள அரசுக்கு கிடையாது. ஆனால் இளம்பெண்கள்  செல்வதில் அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhata Rata Yatra ,Amit Shah ,Sabarimala , Bhaj Rath Yatra, Sabarimala, Darshanam, Amit Shah and Kerala
× RELATED ஜெகன் மோகன் ரெட்டி அரசு கொண்டு வந்த...